KALAKALAPPU TAMIL CHAT
If this is your first visit, You may have to register before you can post: click the register link above to proceed. To start viewing messages, select the forum that you want to visit from the selection below.
KALAKALAPPU TAMIL CHAT

TAMIL CHAT ROOM WITH VOICE, VIDEO, KARAOKE & LYRICS | NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM FOR TAMIL COMMUNITY.

For Updates Via FACEBOOK Just Click ’LIKE" Button
KALAKALAPPU TAMIL CHAT
Latest topics
» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.
Tue May 27, 2014 2:37 pm by ctnsivani

» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.
Tue May 27, 2014 2:36 pm by ctnsivani

» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.
Tue May 27, 2014 2:35 pm by ctnsivani

» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு
Thu May 22, 2014 4:09 pm by ctnsivani

» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.
Thu May 22, 2014 4:04 pm by ctnsivani

» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே
Thu May 22, 2014 2:34 pm by ctnsivani

» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்
Thu May 22, 2014 2:32 pm by ctnsivani

» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி
Tue May 20, 2014 6:27 pm by ctnsivani

» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது
Tue May 20, 2014 6:25 pm by ctnsivani

» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்
Tue May 20, 2014 6:24 pm by ctnsivani

» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து
Tue May 20, 2014 6:23 pm by ctnsivani

» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி
Tue May 20, 2014 6:22 pm by ctnsivani

» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்
Sat May 17, 2014 3:43 pm by ctnsivani

» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு
Sat May 17, 2014 3:33 pm by ctnsivani

» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி
Sat May 17, 2014 2:34 pm by ctnsivani

TOTAL VISITORS
Free Counter
Free Counter
Forum Live Users

You are not connected. Please login or register

நகத்திற்கு இயற்கை மருதாணியே சிறந்தது!

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]


நகங்களை நீளமாக வளரப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமாண எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது பிய்ந்தும் உடைந்தும் தொல்லை தரும். நடுவில் பிரிந்து அல்லது அரைகுரையாக உடைந்து மூளியாகக் காட்சியளிக்கும் நகம் விரலின் அழகையே கெடுத்துவிடும்.

எனவே அதிகமாக நகம் வளர்க்காதீர்கள். நகம் வெட்டியை பயன்படுத்தி குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை வெட்டிவிடுங்கள். நகத்தை நீக்குவதற்கு பல்லால் கடிப்பதை தவிர்க்கவும். அது அசிங்கமான பழக்கம் என்பதை விட தேக நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

நகங்களுக்கு சாயம் பூசி அழகுபடுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். சாதாரணமாக நாம் இதற்கு மருதாணி இலைகளையே பயன்படுத்துகிறோம்.

மருதாணி அரைக்கும் போது நன்கு வெண்ணெய் போல் அரைப்பது சிறந்ததாகும். அப்போதுதான் அது நகங்களில் நன்றாக பற்றும். மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும்.

விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும்.

நகங்களுக்குப் பூசிய பின்னர், உள்ளங்கைகளில் அழகிய வேலைபாடுகள் அடங்கிய, கவர்ச்சி பொருந்திய "டிசைன்களை" மருதாணியைக் கொண்டு இடலாம்.

உள்ளங்கை அளவே உள்ள அட்டைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் அழகான டிசைன்களை வரைந்து, நடுவில் வெட்டி எடுக்கவும். பின், டிசைன்கள் வெட்டப்பட்ட அட்டையை உள்ளங்கையில் வைத்து, அதன் மீது மருதாணி விழுதை நன்கு பரப்பி அதன் இலையை வைத்து கட்டிடவும்.

மறுநாள் மருதாணியை எடுத்துவிடும் போது கைகளில் அழகான டிசைன்கள் அமைந்து விடும். உள்ளங்கைகளைச் சுற்றிப் பொட்டுகள் வைப்பதும் உண்டு.

மருதாணியைத் தவிர, பலரகச் செயற்கைப் பூச்சுகளைப் பலர் உபயோகிப்பதுண்டு. சிவப்பில் பல ரகங்களில் இது கிடைக்கும் இயற்கை நிறத்திலும் உண்டு. இயற்கை நிற பூச்சு நகத்திற்கு தனி நிறம் கெடாது. ஒருவித பளபளப்பை மட்டும் உண்டு பண்ணி மெருகேற்றி விடுகிறது.

பொதுவாக இவ்வகை இயற்கை நிறப்பூச்சைப் பயன்படுத்தி நகங்களுக்கு பொலிவு பண்ணுவது ஆடம்பரமற்ற அமைதியான அழகை தரும்.

ஒவ்வொரு தடவையும் நகப்பூச்சை பயன்படுத்தும் போதும் பழைய பூச்சை அகற்றிவிடுவது மிகமிக அவசியம். காய்ந்த பழைய பூச்சை எடுத்துவிட கத்தியைக் கொண்டோ அல்லது வேறு ஏதும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியோ நகத்தை சுரண்டுவது நல்லதல்ல.

அதற்குறிய "பாலிஸ் ரிமூவரையே" பயன்படுத்த வேண்டும். பழைய பூச்சைக் களைந்து விரல்களை நன்கு சுத்தப்படுத்திப் பின்னர் திரும்பவும் பூசவும்.

கைகளுக்கு பயன்படும் இந்த பூச்சுகளே பாதங்களுக்கும் பயன்படக்கூடியவை.

View user profile

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum